• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வசந்தபாலன் படத்தில் ஹீரோவாக 'மாஸ்டர்’ வில்லன்!

வசந்தபாலன் படத்தில் ஹீரோவாக 'மாஸ்டர்’ வில்லன்!

இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன்

2019-ஆம் ஆண்டு வெளியான ’தி லிஃப்ட் பாய்’ படத்தை வசந்த பாலன் ரீமேக் செய்வதாகக் கூறப்படுகிறது.

  • Share this:
    இயக்குநர் வசந்தபாலனின் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வசந்தபாலன், தனது நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டார். அதோடு இது தனது 25 வருடக் கனவு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    Shalini Ajith – 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷாலினி?

    இந்நிலையில் அந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைதி மற்றும் மாஸ்டரில் தனது அசாத்திய நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்த அர்ஜுன், இந்தப் படத்தில் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

    இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதோடு படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வும் நடந்து வருகிறது. இதற்கிடையே 2019-ஆம் ஆண்டு வெளியான ’தி லிஃப்ட் பாய்’ படத்தை வசந்த பாலன் ரீமேக் செய்வதாகக் கூறப்படுகிறது. அர்ஜுன் தாஸின் குரலும், அவரது நடிப்பும் இந்தப் படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: