2019-ல் உலக அளவில் பிகில் வசூல் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி

2019-ல் உலக அளவில் பிகில் வசூல் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி

விஜய்

 • Share this:
  2019-ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் பிகில் என்று அப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

  அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலைக் குவித்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

  படம் வெளியாகி 50 நாட்களாகியுள்ள நிலையில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்க பதிவில், 50 நாட்களைக் கடந்து உலக அளவில் இந்த வருடம் தமிழ் சினிமாவின் அதிகவசூல் செய்த திரைப்படமாக மாறிய இந்த நேரத்தில், படத்தை விரும்பி தியேட்டரில் பார்த்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். பிகில் பட வசூல் குறித்து வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ ட்வீட் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  Published by:Sheik Hanifah
  First published: