இன்பஅதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர்.. மகளை கட்டி அணைத்து அழுத அர்ச்சனா - வைரல் வீடியோ

இன்பஅதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர்.. மகளை கட்டி அணைத்து அழுத அர்ச்சனா - வைரல் வீடியோ

அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று எலிமினேட் ஆன அர்ச்சனாவை மகள் ஷாரா வரவேற்கும் வீடியோ வெளியாகிவுள்ளது.

 • Share this:
  பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா,சுச்சித்ரா வீட்டிற்கு வந்தனர்.ஆனால் வீட்டிற்கு வந்த இரண்டு வாரத்திலே சுச்சித்ரா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.75 நாட்களை கடந்த பிக்பாஸ் வீட்டில் இதுவரை மிகவும் பிடித்த போட்டியாளர் என யாரும் இல்லை என மீம் கிரியேட்டர்ஸ்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.

  இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் போட்டியாளரில் இருவர் கோழியாக மாறி முட்டையை பாதுகாக்க வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார்.இந்த முட்டைகளை நரிகள் வந்து உடைக்க வேண்டும்.இந்த போட்டியின் போது ஆரி,ரம்யா, அர்ச்சனா இடையே சண்டை ஏற்பட்டது.எப்போதும் கோபமே படாத ஆஜித் கூட கோபப்பட்டு கத்தினார்.இந்த வார டாஸ்க்கில் கோழியாக சிறப்பாக விளையாடிதாக அர்ச்சனா பாராட்டும் பெற்றார்.

  ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில்  வீட்டிலிருந்து அர்ச்சனா நேற்று வெளியேற்றப்பட்டார்.வீட்டிலிருந்து செல்லும் போது ‘ரியோ ரொம்ப நல்லவன் டா’ என்ற வார்த்தையை கூற, ரியோ கண்கலங்கி அழுதார்.ஆனால் அர்ச்சனா வெளியேறியதற்கு, இனிமே தான் வீட்டில் ஆட்டம் ஆரம்பம் என விமர்சனங்களை சிலர் கூறி வருகின்றனர்.

  இந்நிலையில் 75 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துவிட்டு,தனது வீட்டிற்கு சென்ற அர்ச்சனாவை அவரின் மகள் ஷாரா வரவேற்கும் வீடியோ வெளியாகிவுள்ளது.அந்த வீடியோவில் வீட்டிற்கு சென்ற அர்ச்சனா, தனது செல்ல நாயுடன் முத்தமிட்டு விளையாடுகிறார்.
  பின்பு தன் மகளை பார்த்து who is this? என சிரித்துக்கொண்டே கேட்கிறார், அம்மாவை பார்த்த ஷாரா அழுகை தாங்க முடியாமல் ஓடி சென்று கட்டி அனைத்துகொள்கிறார்.இந்த வீடியோவை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: