கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத அர்ச்சனா - ஸ்பெஷல் பவருக்காக புதிய உத்தியா?

கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத அர்ச்சனா - ஸ்பெஷல் பவருக்காக புதிய உத்தியா?

பிக்பாஸ் அர்ச்சனா

அன்பு குரூப்பின் தலைவர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் கதறி அழுதுள்ளார்.

  • Share this:
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக கோழிப்பண்ணை டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு ஸ்பெஷல் பவர் கிடைக்கும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார். எனவே அந்த ஸ்பெஷல் பவரை பெற போட்டியாளர்கள் தனித்தன்மையுடன் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோக்கள நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. முதல் ப்ரோமோவில் ஆரியிடம் இந்த டாஸ்க் குறித்து அனிதா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகிய 3 பேரும் ஆக்ரோஷமாக விவாதம் செய்ததும், அர்ச்சனா 'தரமான சம்பவம் இருக்கு' என கூறும் காட்சிகளும் இருந்த நிலையில் இரண்டாவது ப்ரமோவில் அர்ச்சனாவின் முட்டையை சோம் தொட முயன்றார். அப்போது அந்த முட்டை உடைந்துவிட்ட நிலையில் சோம் முட்டை உடைந்து விட்டதாக அர்ச்சனா குற்றம் சாட்டினார். ஆனால் சோம் தான் உடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அர்ச்சனாவின் புகைப்படம் ஒட்டிய அந்த உடைந்த முட்டையை சோம் கோபமாக தூக்கி வீசினார் , இதனால் அர்ச்சனா என புகைப்படத்தை எப்படி நீ தூக்கி எறியலாம்? என கோபமடைந்தார். இந்த பிரச்னை குறித்து சமாதானப்படுத்த வந்த ரியோவிடம் அர்ச்சனா கோபமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில், அர்ச்சனா கன்பெக்ஷன் அறையில் அழுது புலம்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.கண்ணீருடன் பேசியிருக்கும் அர்ச்சனா, “பார்க்கும் போது எனக்கு பயமாக உள்ளது. இந்த வீட்டிற்கு வந்ததற்கான காரணத்தை மறந்துவிட்டாயா? என தோன்றுகிறது இவ்வளவு. சண்டைகளை எனது மொத்த வாழ்க்கையில் பார்த்தது கிடையாது இந்த வீட்டில் அன்பால் ஜெயிக்க முடியும் என நம்பி தான் வந்தேன். ஆனால் நான் எதற்கு வந்தேன் என தோன்றுகிறது என பிக் பாஸிடம் கூறுகிறார். இதனால் அன்பு குரூப்பில் பிரச்னை வருவது தெளிவாக தெரிகிறது. அதேவேளையில் இவை அனைத்தும் ஸ்பெஷல் பவரைப் பெற அர்ச்சனா கையாளும் உத்தியா என்றும் கேள்வி எழுகிறது.
Published by:Sheik Hanifah
First published: