• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டின் தலைவரான அர்ச்சனா.. இந்த வாரம் வெளியேறப்போவது யார்? 

Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டின் தலைவரான அர்ச்சனா.. இந்த வாரம் வெளியேறப்போவது யார்? 

அர்ச்சனா

அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது வரை 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது வரை 10 போட்டியாளர்கள் உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வார கோழிப்பண்ணை டாஸ்க் முடிவில் யாரிடம் பணம் அதிகம் இருக்கிறது என பிக் பாஸ் கேட்டார். அதில் பாலாஜியிடம் தான் அதிக பணம் இருந்தது. ரியோ தன்னிடம் எதுவும் இல்லை என கூறினார். அதிக பணம் வைத்திருக்கும் பாலாஜிக்கு ஒரு சூப்பர் பவர் தரப்படும் என்றும், அது என்ன என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என பிக் பாஸ் கூறினார்.  பின்னர் இந்த வாரம் டாஸ்கில் சிறப்பாக செய்த இருவரை தேர்ந்தெடுத்து சொல்லும்படி பிக்பாஸ் கூறினார். 

    அதில் அர்ச்சனா மற்றும் பாலாஜி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறியபோது ரம்யாவை அனைவரும் தேர்வு செய்தனர். இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யமும், ஈடுபாடும் இல்லாத போட்டியாளர்கள் இருவரை தேர்ந்தெடுக்க கூறியபோது ஷிவானி மற்றும் கேபி தேர்வு செய்யப்பட்டனர். அப்போது பாலாஜி, அனிதாவின் பெயரை கூறினார். அனிதா இதுவரை பாத்ரூம் க்ளீனிங் அணிக்கு செல்லவில்லை என்றார், அதற்கு அனிதா எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை இன்று தான் என்னுடைய டர்ன் என வாங்குவாதம் செய்தார். 

    ஒருவழியாக ஷிவானி, கேபி ஜெயிலுக்கு சென்றனர்.  ஆனாலும் இருவரும் ஜெயிலில் ஜாலியாக தான் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, பிக் பாஸ் வீட்டில் இருக்க மற்ற யாருக்கும் தகுதி இல்லை தனக்கு மட்டும் தான் தகுதி இருப்பதாக ஆரி எண்ணுவதாக பாலாஜி, ரம்யா, ஆஜித் பேசி கொண்டிருந்தனர். மேலும் ஆரி இந்த வீட்டில் மற்றவர்களை குறை கூற கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடுவதாக ஹவுஸ் மேட்ஸ் அணிவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது பாலாஜி, ஆரி இப்படி தான் வருவார் என நடந்து காட்டினார். இதனிடையே போட்டியாளர்களை ஒவ்வொருவராய் கன்ஃபென்ஷன் ரூமுக்கு அழைக்கும் பிக்பாஸ் இத்தனை நாட்களில் பிக்பாஸ் வீட்டில் உங்களுடைய பங்களிப்பு என்ன என்று கேட்டு வருகிறார்.

    ஆஜித்தின் நடிப்பு திறமை 

    இதுவரை ஷிவானி, ரியோ, அனிதா, அர்ச்சனா ஆகியோரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்துள்ள பிக்பாஸ், நேற்று ஆஜித்தை அழைத்தார்.  ஆஜித்திடம் இத்தனை நாட்களில் யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன ஆஜித், அம்மாவ மிஸ் பண்றேன் என்றார். இவ்வளவு சின்ன வயசுல நிறைய சாதிச்சுருக்கீங்க. இந்த கேம் ஷோவை தாண்டி எதை நோக்கி உங்களுடைய பயணம் என்றார். அதற்கு பதில் சொன்ன ஆஜித் பாட்டு பாடுவதை தாண்டி நான் நல்லா நடிக்கிறேன் என்று பலரும் என்னிடம் கூறியுள்ளார்கள். அதனால் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். 

    அதனைக் கேட்ட பிக்பாஸ், ஓகே ஒரு சீன் நடிச்சுக் காட்டுங்க என்று கூறி ஒரு சீனை கூறினார். அதாவது, படத்தில் வில்லன்கள் உங்கள் அம்மாவை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருக்கிறாகள். இந்த இடத்தில் அம்மா ஓகேவா அல்லது கேர்ள் ஃபிரண்ட் வச்சுக்கலாமா என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு இந்த இடத்துல மட்டும் கேர்ள் ஃபிரண்ட் வச்சுக்கலாம் பிக்பாஸ் என்றார். இதைத்தான் எதிர்பார்த்தேன் என்ற பிக் பாஸ், ஆஜித் வச்சுக்குங்க என்று கூறினார். தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் ஆஜித், சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். 

    கண்கலங்கிய ஆரி 

    இதனை தொடர்ந்து ஆரியை அழைத்த பிக் பாஸ், நீங்கள் யாரை மிஸ் பண்றீங்க என்றார், அதற்கு ஆரி, தன் மனைவி மற்றும் மகளை மிஸ் செய்வதாக எமோஷனலாக பேசினார். மேலும் எனக்கு இருக்கும் ஒரே சொத்து அவர்கள் தான் என்றார். பின்னர் இதுவரை சிறப்பாக பெர்பார்ம் செய்து வருகிறார் என பிக் பாஸ் கூறியதும் கண்ணீர் விட்டார்.இந்த வீட்டில் நான் என்ன செய்தாலும் என் மீது குறைகள் வருகிறது, ஆனால் நீங்கள் இப்படி கூறியதால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். பின்னர் நாட்கள் குறைவாகவே இருக்கிறது, என்டர்டெயின்மெண்ட் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என கூறி பிக் பாஸ் அனுப்பி வைத்தார். 

    இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் நேற்று தேர்வான ஆர்ச்சனா, ரம்யா மற்றும் பாலாஜி பங்கேற்கின்றனர். ஒரு வலை பொருத்திய போர்டுக்கு பின்னால் இருந்து கைகள் மூலமாக வலைக்கு முன் இருக்கும் பைகளை ஒவ்வொன்றாக எடுத்து வந்து முன்னர் இருக்கும் டேபிள் மேல் வைக்க வேண்டும். அனைத்து பைகளையும் முதலில் எடுப்பவர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று பேரும் தீவிரமாக டாஸ்கில் ஈடுபடுகின்றனர். 

    இடையே டாஸ்கில் பாலாஜி விதியை மீறி பையை அதற்கான வழியில் எடுக்காமல் நேரடியாக ஒரு வரிசையில் இருந்து மற்றொரு வரிசைக்கு எடுத்து செல்வதாக சிலர் கூறுகின்றனர். இறுதியாக இதில் அர்ச்சனா அனைத்து பைகளையும் முதலில் எடுத்து முடித்து வெற்றி பெறுகிறார். அதனால் அவர் தான் அடுத்த வார கேப்டன். ஆஜித், சோம், அர்ச்சனா ஆகிய மூவரில் இருந்து தான் ஒருவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அர்ச்சனா இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ள நிலையில் அவர் வெளியேறவில்லை என்றார் அடுத்தவார கேப்டனாக நிகழ்ச்சியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: