ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

news18
Updated: August 4, 2018, 5:58 PM IST
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்
வில் ஸ்மித் & ஏ.ஆர்.ரஹ்மான்
news18
Updated: August 4, 2018, 5:58 PM IST
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விஜய்யின் ‘சர்கார்’, இயக்குநர் மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’, அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படம் என பிஸியாக இயங்கி வருகிறார். இது தவிர பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும் அவருடைய கதை - தயாரிப்பில் உருவாகும் '99 சாங்க்ஸ்' படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது மனதுக்கு நெருக்கமான விஷயம் குறித்து வில் ஸ்மித்துடன் பேசியதாகக் கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், டிசம்பர் மாதம் இசைக் கச்சேரி என்று ஒரு குறிப்பும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதனால், வில் ஸ்மித்துடன் ரஹ்மான் எது குறித்து பேசினார் என்பதை அறிந்துகொள்ள டிசம்பர் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.


First published: August 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்