பசியோடு இருப்பவர்களை நினைக்கையில் தூங்க முடியவில்லை.. ஊரடங்கின் மறுபக்கத்தை வெளிநாட்டு நண்பருடன் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோர்கன்

நான் ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை பற்றியே நினைக்கிறேன் என்றார் ரஹ்மான்.

  • Share this:
ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் வாடும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச இசையமைப்பாளர்களுடன் இணைந்து ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற பாடலுக்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதி உள்ளார்.

மனிதநேய ஆர்வலர் கென் கிராகனின் முன்முயற்சிக்கு இணங்க இந்தப் பாடலை உருவாக்குகிறார் ரஹ்மான். இதன்மூலம் வரும் தொகையை காலநிலை மாற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்படும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பூமி தினத்தை முன்னிட்டு, இன்ஸ்டாகிராம் நேரலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நேரலையில் இந்த திட்டத்தின் முக்கிய அங்கம் வகிக்கும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் நீல் மோர்கன் இணைந்து இப்பாடல் உருவாக்கப்பட்டது குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் இருவரும் உரையாற்றினர்.

அப்போது பேசிய மோர்கன், "ஊரடங்கு குறித்து பூமியின் மாசு குறைந்திருக்கிறது. தூய்மையான காற்று கிடைக்கிறது. பூமி புதுப்பித்துக்கொள்வது சிறப்பாக இருக்கிறது", என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், "நான் ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை பற்றியே நினைக்கிறேன்.

அன்றாட உணவு தேவைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் நிறைய மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்களை நினைக்கும் போது எவ்வளவு எளிதாக தூங்க முடிவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் என்ற எண்ணமே நிரம்பி இருக்கிறது. இந்த பூமியில் அவர்களும் ஒரு பகுதியினர்," என உருக்கமாக தெரிவித்தார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: