AR Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்தை ஈர்த்த சிறுமியின் வைரல் வீடியோ..

ஏ.ஆர்.ரஹ்மான்

ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’பாடலை சிறுமி அழகாக பாடும் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது இசை பயணத்தை ரோஜா படத்தின் மூலம் தொடங்கினார்.தனது முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார்.

    பின்பு இவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே ஹிட் என்று தான் கூற வேண்டும்.ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

    Isai Puyal AR Rahman to compose music for Atlee - Shah Rukh Khan movie

    இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மானுக்கு இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by ARR (@arrahman)





    அந்த வீடியோவில் மழலை மாறாத குழந்தை , ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை ஹிந்தி மற்றும் தமிழில் அழகாக பாடுகிறது.இந்த பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: