• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 19 வருடங்களுக்குப் பிறகு ரஹ்மானுடன் இணையும் காதல் தேசம் கதிர்

19 வருடங்களுக்குப் பிறகு ரஹ்மானுடன் இணையும் காதல் தேசம் கதிர்

ஏ.ஆர்,ரஹ்மான் -கதிர்

ஏ.ஆர்,ரஹ்மான் -கதிர்

காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கதிர் 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மகனை வைத்து படம் இயக்கவுள்ளார்.

  • Share this:
    காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என காதலுக்கு அத்தாரிட்டியாக இருந்தவர் கதிர். இவரது படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பாடல்கள் அன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக அமைந்தன. இந்த காதல் காம்போ 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைகிறது. 

    1991 இல் இதயம் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். அதில் இளையராஜாவின் இசை மாயம் செய்திருந்தது. அதையடுத்து இயக்கிய உழவனில் ரஹ்மானோடு கைகோர்த்தார். ரோஜாவில் அறிமுகமாகி ஒருவருடமே ஆகியிருந்த நிலையில் உழவன் வெளிவந்தது. ரஹ்மானின் முதல் கிராமத்து இசை முயற்சியாக அப்படம் அமைந்தது. அதையடுத்து காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என வரிசையாக காதல் படங்கள் எடுத்தார். அவர் செய்த தவறு, காதல் வைரஸை இயக்கியதோடு தயாரித்தது. படம் தோல்வியடைந்தது



    அதற்குப் பிறகு 2016 இல் கன்னட படமொன்றை இயக்கினார். பிறகு அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லாமலிருந்தது. சுமார் 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் படம் இயக்க வந்துள்ளார். இந்தப் படத்தை ரங்கநாதன் என்பவர் தயாரிக்கிறார். அவரது மகன் கிஷோர் ஹீரோ. மகனுக்காக தந்தை தயாரிக்கும் படம் இது. ஏற்கனவே ஹீரோ, குணால், அப்பாஸ், ரம்பா, ஸ்ரீதேவி விஜயகுமார், ரிச்சார்ட் என பலரை அறிமுகப்படுத்தியவர் என்பதால் கிஷோரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை அவரது தந்தை கதிரிடம் தந்துள்ளார்.

    சொல்ல வேண்டியதில்லை, இதுவும் காதல் படம்தான். இசையமைக்க ரஹ்மான் ஒப்புக் கொண்டிருப்பது இந்தப் படத்தை முக்கியமானதாக்குகிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: