Home /News /entertainment /

இந்திக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கும் ஏ.ஆர். ரகுமானின் தமிழ் ஆதரவு குரல்

இந்திக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கும் ஏ.ஆர். ரகுமானின் தமிழ் ஆதரவு குரல்

ஏஆர் ரகுமான்

ஏஆர் ரகுமான்

ரகுமான் கதை எழுதி தயாரித்த 99 songs படவிழாவில் ஹிந்தியில் ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்ப ஐயோ ஹிந்தியா என ரகுமான் கதறி ஓடியது அனைவருக்கும் நகைப்பை ஏற்படுத்தினாலும் அதுவும் ரஹ்மானின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு தான்.

  இந்தி திணிப்பு ஒருபக்கம் பேசப்பட்டுக் கொண்டே இருந்தாலும் தமிழுக்காக தமிழ் சினிமாவில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரலாக மாறியிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். சமூக ஊடகத்தில் சமீபத்தில்  அவர் பதிவிட்ட தமிழன்னை புகைப்படமும் வைரலாகியுள்ளது.

  கோடம்பாக்கத்தில் இருந்து கோல்டன் குளோப் வரை தமிழ் சினிமாவில் வேறு யாரும் எட்ட முடியாத உயரங்களை எட்டிய தமிழர் ஏ.ஆர்.ரகுமான். தேசிய விருதுகள், ஆஸ்கர், கோல்டன் க்ளோப் என எத்தனை உச்சிக்கு சென்றாலும் அந்த மேடைகளில் எல்லாம் தமிழை ஒலிக்கச் செய்து கொண்டே இருக்கிறார் ரகுமான். ஆஸ்கர் விருது வென்ற மேடையில் ஏ ஆர் ரகுமான்  எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசியது 7 கோடி தமிழ் நெஞ்சங்களிலும் அப்படியே பதிந்து போனது.

  பாலிவுட்டில் வழங்கப்படும் IIFA விருது வழங்கும் மேடையில் சிறந்த நடிகரை அறிவிக்குமாறு அழைத்தபோது ரஹ்மான் தமிழில் சிறந்த நடிகரை அறிவித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அனைத்து மொழி பேசும் நடிகர்களும் இருக்கும் அவையில் தாய் தமிழில் பேசுவது பெருமை என ஏ ஆர் ரகுமான் அந்த மேடையில் உறுதிப்படுத்தினர்.

  இதேபோல தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்ட போது அதற்கான பாடலை இசையமைக்கும் வாய்ப்பை ஏ ஆர் ரஹ்மானின் தமிழ் பற்றை நன்கு உணர்ந்திருந்ததால் அவரிடமே வழங்கினார், அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி.

  இதையும் படிங்க: Taanakkaran Review : விக்ரம் பிரபுவின் சினிமா கெரியரில் தி பெஸ்ட் மூவி டாணாக்காரன்!


  தமிழ் மொழிக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்படும் சமயத்திலும், இந்தி மொழி ஆட்சி மொழியாக வேண்டும் என சர்ச்சைகள் எழும் போது அதற்கு எதிராக தனது எதிர்ப்பை ஏதோ ஒருவகையில் ஏ ஆர் ரகுமான் பதிவு செய்துகொண்டே இருக்கிறார். கடந்த முறை இந்த வகையிலான பேச்சு எழுந்தபோது வெளிநாட்டிற்கு செல்லும் டிக்கெட்டை ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தது,  இந்தியைத் திணித்தால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என கூறும் குறிப்பாகவே கருதப்பட்டது.

  மேலும் ரகுமான் கதை எழுதி தயாரித்த 99 songs படவிழாவில் ஹிந்தியில் ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்ப ஐயோ ஹிந்தியா என ரகுமான் கதறி ஓடியது அனைவருக்கும் நகைப்பை ஏற்படுத்தினாலும் அதுவும் ரஹ்மானின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு தான். தற்பொழுது ஆல்பங்கள் வழியாக தனது தமிழ் சேவையை தொடங்கி இருக்கும் ரகுமான் மூப்பில்லா தமிழே தாயே என்ற ஒரு பாடலை அண்மையில் வெளியிட்டார்

  மேலும் படிக்க: தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி 1000 சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு ஏற்பாடு


  ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ள சூழலில், ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ்தாய் தமிழின் அடையாளமான ழ கரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை, இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு தமிழணங்கு என பதிவிட்டுள்ளார். ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த இந்த ஓவியத்தை தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக ஊடக பக்கத்திலும் ரகுமான் பகிர்ந்துள்ளதுதான் தற்போதைய பேசுபொருளாக ஆகியுள்ளது.

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: AR Rahman, AR rahman tweet

  அடுத்த செய்தி