Home /News /entertainment /

2.0 படத்தின் புதிய அப்டேட்!

2.0 படத்தின் புதிய அப்டேட்!

லண்டனில் உள்ள ஷாம்பர் ஆர்கஸ்ராவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் - இயக்குநர் சங்கர்

லண்டனில் உள்ள ஷாம்பர் ஆர்கஸ்ராவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் - இயக்குநர் சங்கர்

  • News18
  • Last Updated :
    2.0 படத்தின் இறுதிக்கட்ட பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லண்டனில் துவங்கியுள்ளார்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும், ஹீரோயினாக எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 75 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதன் இறுதிகட்டப் பணிகளை இயக்குநர் சங்கர் செய்து வருகிறார். மேலும் இந்த படம் முழுவதும் 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சி படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லண்டனில் உள்ள சேம்பர் ஆர்கஸ்ராவில் (Chamber orchestra) படத்தின் இறுதிக்கட்ட பின்னணி இசை பணிகளை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    2.0 படத்தின் டிரெய்லரை தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர் பாகுபலியை மிஞ்சுவதாக உள்ளது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: 2.0 movie, A.R.Rahman, Director Shankar, Rajinikanth

    அடுத்த செய்தி