கவனமாக இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல்களுக்கு உயிர் உள்ளது, சுஷாந்த்தின் நினைவுகள் உள்ளன - ஏ.ஆர் ரஹ்மான்
தில் பெச்சாரா பாடல்களைக் குறித்து பேசும்போது, “மிகக் கவனமாக பாடல்கள் இசையமைக்கப்பட்டன. பாடல்களில் உயிர் உள்ளது. இப்போது சுஷாந்த்தின் நினைவுகளும் உள்ளன” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் சுஷாந்த்
- News18 Tamil
- Last Updated: July 11, 2020, 8:53 AM IST
தில் பெச்சாரா பாடல்களைக் குறித்து பேசும்போது, “மிகக் கவனமாக பாடல்கள் இசையமைக்கப்பட்டன. பாடல்களில் உயிர் உள்ளது. இப்போது சுஷாந்த்தின் நினைவுகளும் உள்ளன” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' திரைப்படம் ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை, ஹாட் ஸ்டாருக்கு சந்தா கட்டாதவர்களும் இலவசமாகப் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தில் பெச்சாராவின் ஒரு பாடல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை பாடியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து Midday பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர், ”இசையமைப்பதற்கு எந்த விதிமுறைகளும் தேவையில்லை, அது இதயம் சம்பந்தப்பட்டது. நான் பாடல்களை உருவாக்கும்போது அவற்றை கொஞ்சம் சுவாசிக்க வைத்துவிட்டு பிறகு இயக்குநரிடம் காண்பிப்பேன். இந்த பாடல்களில் உயிர் உள்ளது, சுஷாந்த்தின் நினைவுகள் உள்ளன" என்று தெரிவித்திருக்கிறார்.