Home /News /entertainment /

தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் உருவம் - வைரலாகும் புகைப்படம்

தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் உருவம் - வைரலாகும் புகைப்படம்

தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட ஏ.ஆர். ரகுமான் உருவம்

தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட ஏ.ஆர். ரகுமான் உருவம்

தமிழ் எழுத்துகளால் ரசிகர் ஒருவர் வரைந்து கொடுத்த தனது புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது இசைத் திறமையால் தமிழர்களை மட்டுமல்லாது இந்தியாவைக் கட்டிப்போட்டவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று உலகப் புகழ்பெற்ற அவர், கிராமிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். அவர் இந்திய இசைத்துறைக்குச் செய்த அளப்பரிய சேவையைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தை ரசிகர் ஒருவர் ஏ.ஆர்.ரகுமானுக்குப் பரிசாக அளித்துள்ளார்.

அந்த ஓவியத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்த பாடல்களின் வரிகள் எழுதப்பட்டுள்ளன. எழுத்தணிக் கலையில் (Calligraphy) வடிவமைக்கப்பட்ட அந்தப் படத்தை, ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களைக் குவித்தது.



 




View this post on Instagram





 

A post shared by ARR (@arrahman)






ரகுமானுக்கு இந்த அரிய படத்தை தமிழ் அச்சுக்கலை நிபுணரான தாரிக் அஜீஸ் பரிசாக அளித்துள்ளார். இந்தப் படம் தோல் காகிதத்தில் வரையப்பட்டுள்ளது போன்று தோற்றமளிக்கிறது. தாரிக் அஜீஸின் சிறப்பான கைவண்ணத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏ.ஆர்.ரகுமானின் குணாதிசயங்களையும் அழகையும் ஒருசேர பார்ப்பதுபோல் இருக்கிறது.

Tamil Typography மேற்கொள்ளும் ’Mozart of Madras’ பக்கத்தையும் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேக் செய்துள்ளார். இதனால், ரகுமானைப் புகழும் ரசிகர்கள், அற்புதமான படைப்பைக் கொடுத்துள்ள கலைஞர் தாரிக் அஜீஸையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். ரகுமானுக்காக, இவ்வளவு சிரத்தை எடுத்து அவர் வரைந்துள்ள படத்துக்கு பெரும்பாலான ரசிகர்கள் அன்பு மற்றும் நெருப்பு எமோஜிகளைப் பயன்படுத்தி, தங்களின் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, Awesome, Thalaiva, Amazing என புகழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, அவரது புகழுக்கு மகுடம் சேர்க்கும் விதமாக BAFTA (British Academy Film Awards)-வின் இந்திய தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Also read: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக கால் மசாஜ் மையம்

இதற்கும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரகுமான், இந்தச் செய்தி வியப்பளிப்பதாகவும், அதேநேரத்தில் பொறுப்புகள் கூடியிருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும, Atrangi Re’ என்ற ஹிந்திப் படத்துக்கும் அவர் இசையமைத்துள்ளார். அது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published:

Tags: AR Rahman, AR rahman tweet

அடுத்த செய்தி