எனது பாடல்களை ரீமிக்ஸ் செய்வது எரிச்சலூட்டுகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி

ஏ.ஆர்.ரஹ்மான்

  • Share this:
தனது பாடல்களை ரீமேக் செய்ய சொல்வது எரிச்சலூட்டுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமான காலம்தொட்டு இசை உலகில் எண்ணற்ற புதுமைகளை தொடர்ந்து செய்து வருகிறார். DTS இசையில் புதிய உத்திகளை கையாண்டது, டிஜிட்டலில் புதிய ஒலிகளை அறிமுகப்படுத்தியது என திரைப்படத்திற்கு திரைப்படம் வித்தியாசம் காட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பத்திலிருந்தே பழைய பாடல்களை ரீமேக் செய்வதில் விருப்பம் இல்லாமலே இருந்து வந்துள்ளார்.

புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் பல திரைப்படங்களிலும் இளம் இசையமைப்பாளர்கள் ரீமேக் யுக்தியை கையாண்டு வந்த காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ரீமேக் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த நியூ திரைப்படத்திற்காக முதல் முறையாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இந்த பாடலை கேட்டு எம்.எஸ். விஸ்வநாதன் தனது பாடலின் ஜீவனை கெடுக்காமல் இருந்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றியும் கூறியிருந்தார்.

இதன் பின்னர் ரீமேக் செய்வதை தவிர்த்து வந்த ரகுமான் ‘அழகிய தமிழ்’ மகன் திரைப்படத்திற்காக ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை ரீமிக்ஸ் செய்து இருந்தார். இதுவே ரஹ்மான் தமிழில் செய்த கடைசி ரீமேக் பாடலாகும். பின்னர் பெரும்பாலும் புதிய இசையை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவார் ஏ.ஆர். ரஹ்மான். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓகே கண்மணி’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பான ‘ஓகே ஜானுவில்’, பாம்பாய் படத்தில் இடம்பெற்ற ‘அந்த அரபிக் கடலோரம்’ பாடலை இயக்குநரின் வேண்டுகோளுக்கிணங்க ரீமேக் செய்திருந்தார்.

அண்மையில் வெளிவந்த ஸ்ட்ரீட் டான்ஸர் திரைப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘முக்காபுலா பாடலை’ ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபுதேவாவுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், தன் பாடல்களை தானே ரீமேக் செய்வது எரிச்சலூட்டுவதாக கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், புதிய பாடல்களை இசையமைக்கவே ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பாலிவுட்டில் ஏ.ஆர். ரஹ்மானின் பழைய தமிழ் பாடல்களை ரீமிக்ஸ் செய்வது அதிகரித்து வரும் நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Published by:Sheik Hanifah
First published: