Home /News /entertainment /

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான்... வைரலாகும் போட்டோ!

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான்... வைரலாகும் போட்டோ!

நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரகுமான்

நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரகுமான்

உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 463-ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றுள்ளார்.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 463-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த மாதம் ஜனவரி 26,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக நேற்று இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்திலிருந்து துவங்கிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக கலைநிகழ்ச்சியுடன் வலம் வந்தது. அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவி வரவேற்றனர். தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலமானது அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது.

பின்னர், நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெற்ற சந்தனம் பூசும் வைபவத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.

நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரகுமான்


மேலும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி