Home /News /entertainment /

உலகக் கோப்பை ஹாக்கி : ஒடிசா சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு

உலகக் கோப்பை ஹாக்கி : ஒடிசா சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழாவில், இசையமைக்க ஏ.ஆர். ரகுமான் ஓடிசா சென்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
    உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புவனேஸ்வர் சென்றுள்ளார்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் வருகிற நவம்பர் 27-ம் தேதி முதல் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் நவம்பர் 27-ம் தேதி புவனேஸ்வரிலும், நவம்பர் 28-ம் தேதி கட்டாக்கிலும் நடைபெறும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழாவிற்காக ஒடிசா சென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு வரவேற்ப்பு அளித்த அம்மநில முதல்வர்.


    இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அம்மாநில முதல்வருடன் ஆலோசனை செய்ய  ஏ.ஆர்.ரகுமான் இன்று ஒடிசா சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் பிஜ்ஜு பட்னாயக் அவருக்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர்  அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இல்லத்திற்கு அழைத்து, ரகுமானுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து இன்றே மும்பை திரும்பும் ரகுமான், நவம்பர் 27-ம் தேதி புவனேஸ்வரிலும், நவம்பர் 28-ம் தேதி கட்டாக்கிலும் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: A.R.Rahman, Hockey Men’s World Cup

    அடுத்த செய்தி