ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தாமதமாகும் ரஜினி-முருகதாஸ் படம்... இதுவா காரணம்?

தாமதமாகும் ரஜினி-முருகதாஸ் படம்... இதுவா காரணம்?

டிசம்பர் 12 -ம் தேதி 1950-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ்

டிசம்பர் 12 -ம் தேதி 1950-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ்

தேர்தலுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடக்க உள்ள படம் தேர்தல் பணிகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினி நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான படம் பேட்ட. விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, வசூலையும் குவித்தது.

இதையடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. படப்பிடிப்பு செலவுகளுக்காக பணம் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தேர்தலுக்குப் பிறகு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO WATCH

First published:

Tags: AR Murugadoss, Rajinikanth