முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் அனுஷ்காவின் நிசப்தம்

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் அனுஷ்காவின் நிசப்தம்

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படங்களை OTT தளங்கள் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்காக கைப்பற்றி வருகின்றன.

  • Last Updated :

அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சைலன்ஸ். தமிழில் நிசப்தம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

கோனா வெங்கட் மற்றும் கோபி மோகன் இணைந்து கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. படம் முழுக்க வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் ரிலீசாகாமல் இருந்த இத்திரைப்படம் தற்போது அமேசானில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தப் படத்தை அமேசான் ரூ.26 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் வெளியானால் அமேசானில் வெளியாகும் முதல்படமாக இது அமையும். அனுஷ்கா நடித்த படம் என்பதால் டிஜிட்டலில் படம் வெளியாவதற்கு ஆந்திரா - தெலங்கானா திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

top videos


    First published:

    Tags: Actress Anushka