Home /News /entertainment /

ஆசியக் கண்டத்தின் செக்ஸியஸ்ட் பெண் - பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்திய நடிகை

ஆசியக் கண்டத்தின் செக்ஸியஸ்ட் பெண் - பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்திய நடிகை

நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா

ஆசியாவின் செக்ஸியஸ்ட் பெண் பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகைக்கு இடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு வருடத்தின் இறுதிநாட்கள் நெருங்கும் போது அந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த்வர்கள் யார், சாதித்தவர்கள் யார் என்றெல்லாம் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம். இதை தெரிந்துகொள்ளவும் பலர் ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஈகிள் ஐ என்ற பத்திரிகை நிறுவனம் ஆசியாவில் உள்ள செக்ஸியான ஆண் மற்றும் பெண்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

அதில் செக்ஸியஸ்ட் ஆண்கள் பட்டியலில் நடிகர் கிருத்திக் ரோஷன் முதல் இடத்தைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து செக்ஸியஸ்ட் பெண்கள் 50 பேரின் பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டது.

அதில் முதல் இடத்தில் ஆலியா பட், 2-வது இடத்தில் தீபிகா படுகோன், 3-வது இடத்தில் ஹினா கான், 6-வதாக கத்ரீனா ஃகைப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்பட்டியலில் முதல்முறையாக நடிகை அனுஷ்கா ஷெட்டி இடம்பெற்றுள்ளார். அவர் 22-வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress Anushka

அடுத்த செய்தி