கணவருடன் இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்ற காஜல்.. கமெண்ட் செய்த அனுஷ்கா

கணவருடன் இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்ற காஜல்.. கமெண்ட் செய்த அனுஷ்கா

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹிமாலாயாவிற்கு ட்ரெக்கிங் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபரான கவுதன் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கொரோனா காலம் என்பதால் நெருங்கி உறவினர்கள் முன்னிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது.

  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலின் திருமணத்திற்கு பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து கூற முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

  இதையடுத்து காஜல் தனது கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்றார்.அங்கிருந்து அவர் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகின.இந்நிலையில் 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் காஜல் தனது கணவருடன் ஹிமாலாயாவிற்கு ட்ரெக்கிங் சென்றுள்ளார்.  இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்‘இந்த ஆண்டை ஹிமாலாயாவில் ட்ரெக்கிங் செய்ததுடன் தொடங்கினோம்’ என்று கூறியுள்ளார்.இதற்கு நடிகை அனுஷ்கா சூப்பர் என்று கமெண்ட் செய்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்..
  Published by:Tamilmalar Natarajan
  First published: