Home » News » Entertainment » ANUSHKA SHARMA VIRAT KOHLI VIRAL PICTURES AFTER PARENTING SCS

பெற்றோரான பிறகு வெளியில் வந்த அனுஷ்கா-விராட் - வைரலாகும் படங்கள்!

தனது பெண் குழந்தையின் பிறப்பை சமூக ஊடகங்களில் அறிவித்தார் விராட் கோஹ்லி.

பெற்றோரான பிறகு வெளியில் வந்த அனுஷ்கா-விராட் - வைரலாகும் படங்கள்!
விராட் கோஹ்லி - அனுஷ்கா ஷர்மா
  • Share this:
தங்களது முதல் குழந்தை பிறந்த பிறகு இன்று முதன் முதலில் வெளியில் வந்த அனுஷ்கா - விராட் தம்பதியரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளில், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முக்கியமானவர்கள். இவர்கள் இன்று பாந்த்ராவுக்கு வந்திருந்தனர். 2017 டிசம்பரில் திருமணம் செய்த அனுஷ்கா மற்றும் விராட் தம்பதி, 2021 ஜனவரி 11-ஆம் தேதி முதல் குழந்தைக்கு பெற்றோரானார்கள்.

தனது பெண் குழந்தையின் பிறப்பை சமூக ஊடகங்களில் அறிவித்தார் விராட் கோஹ்லி. அதோடு அனுஷ்கா மற்றும் விராட் இருவருமே தங்கள் மகள் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பகிர வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டனர். அதோடு தங்களது தனிப்பட்ட வாழ்வை மதிக்கும்படியும் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டனர்.


இந்நிலையில் இன்று அனுஷ்கா சர்மாவும் அவரது கணவர் விராட் கோஹ்லியும் பந்த்ராவுக்கு வந்தனர். அனுஷ்கா ஆல்-டெனிம் உடையிலும், கோஹ்லி கருப்பு நிற தோற்றத்திலும் காணப்பட்டார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 21, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories