என் மகளை யாரும் போட்டோ எடுக்காதீங்க.... விராட்டின் சமீபத்திய கோரிக்கை!

என் மகளை யாரும் போட்டோ எடுக்காதீங்க.... விராட்டின் சமீபத்திய கோரிக்கை!

குட்டி தேவதையை வீட்டிற்கு வரவேற்ற விராட்

"அதேசமயம், எங்களை பற்றி உங்களுக்குத் தேவையான அனைத்து கன்டன்ட்களையும் நாங்களே வழங்குவோம் என்றும் எங்கள் குழந்தை பற்றிய எந்தவொரு கன்டன்ட்டையும் வெளியிடவோ, போட்டோ எடுக்கவோ, வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்வதாக விராட் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை விராட் கோலி ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்றிருந்தபோது தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விராட், அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதல் டெஸ்ட் முடிந்தபின், இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஜனவரி 11 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது குழந்தையும் மனைவியும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் கூறினார். தம்பதியினர் இப்போது மும்பையில் உள்ள பாப்பராசி சகோதரத்துவத்திற்கு (paparazzi fraternity in Mumbai) ஒரு குறிப்பை எழுதியுள்ளனர்.

அதில், உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறி உள்ளார்.

Also read... சமந்தா வில்லி ரோலில் நடிக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2 டீசர் வெளியானது!

எங்கள் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம், அதற்கு உங்கள் உதவியும் ஆதரவும் எங்களுக்குத் தேவை” என்று தம்பதியினர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் பாப்பராசிக்கு (paparazzi) தேவையான “கன்டன்ட்டை” சரியான நேரத்தில் தாங்கள் ஷேர் செய்வதாகவும் விராட் உறுதியளித்துள்ளார்.

"அதேசமயம், எங்களை பற்றி உங்களுக்குத் தேவையான அனைத்து கன்டன்ட்களையும் நாங்களே வழங்குவோம் என்றும் எங்கள் குழந்தை பற்றிய எந்தவொரு கன்டன்ட்டையும் வெளியிடவோ, போட்டோ எடுக்கவோ, வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்வதாக விராட் கூறியுள்ளார். எங்களை பற்றி நன்கு தெரிந்த உங்களுக்கு நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்று புரியும், இதுவரை எங்கள் மீது காட்டிய அன்பிற்கு நன்றி கூறுவதாகவும் இனியும் உங்கள் அனைவரின் அன்பு தொடர வேண்டும் என்றும் விராட் கேட்டுக்கொண்டுள்ளார்,” அனுஷ்கா சர்மா மற்றும் கோலி தங்களது மூன்றாவது திருமண ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: