நடிகர் பிரபாஸ் படத்தில் சீதாவாக நடிக்கும் அனுஷ்கா சர்மா?

நடிகர் பிரபாஸ் படத்தில் சீதாவாக நடிக்கும் அனுஷ்கா சர்மா?

அனுஷ்கா ஷர்மா மற்றும் அவரது கணவரான விராட் கோஹ்லி ஆகியோர் சமீபத்தில் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்தனர்.

 • Share this:
  ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட தனது அடுத்த படமான ஆதிபுருஷிற்காக பிரபாஸுடன் இணைவதாக அன்சுங் வாரியர் இயக்குனர் 'ஓம் ரவுத்' அறிவித்துள்ளார்.

  ராவணனை அடிப்படையாக கொண்டு 'லங்கேஷ்' எனும் வேடத்தில் சைஃப் அலிகான் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பெரிய பட்ஜெட்டான இந்த திரைப்படத்தில் சீதாவாக நடிக்க அனுஷ்கா சர்மா இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

  பிங்க்வில்லாவின் சமீபத்திய தகவலின் படி அனுஷ்கா ஷர்மா இந்த கதாபாத்திரத்திற்கான சிறந்த ஆளாக உள்ளார். 'ஓம் ரவுத்' படத்தின் முழு யோசனை குறித்தும் அனுஷ்காவை சந்தித்து பேசி வருகிறார். மேலும், அனுஷ்கா ஷர்மாவும் அவரது கதையோட்டத்தில் மூழ்கிப் போய் உள்ளார். உண்மையில், அவர்களின் சந்திப்பு மிகவும் சாதகமான விளைவை கொண்டிருக்கும் மற்றும் அவர் மிகச்சிறப்பாக திரையில் சீதாவாக வெளிப்படுவார் என்று நம்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.

  இருப்பினும் அனுஷ்கா ஷர்மா மற்றும் அவரது கணவரான இந்திய கிரிக்கெட் வீரரின் கேப்டனான விராட் கோஹ்லி ஆகியோர் சமீபத்தில் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்தனர். அதன்படி அனுஷ்காவிடம் இருந்து அனுமதி வந்தால், அதற்கேற்ப படப்பிடிப்பு பணிகளை தயாரிப்பை குழு திட்டமிடும் என்று ஒரு சில வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

  மேலும் படக்குழு, "அனுஷ்கா ஷர்மா தனது பிரசவத்திற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் படப்பிடிப்பு பணிகளை தொடங்க தயாராக இருப்பதாக கூறுகிறது. படத்தின் இயக்குனர் 'ஓம் ரவுத்' ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க விரும்புகிறார். மேலும் ஆதிபுருஷ் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டிருப்பதால், அவர்கள் முதலில் அனுஷ்கா தேவையில்லாத பகுதிகளை படமாக்குவார்கள். அதன்படி பிரபாஸ், சைஃப் அலிகான் படப்பிடிப்பு காட்சிகள் முதலில் நடக்கலாம் என கூறப்படுகிறது.

  இருப்பினும் அனுஷ்கா இந்த படத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.  சீதாவாக நடிக்க ஓம் ரவுத்தின் முதல் தேர்வாக அனுஷ்கா சர்மா இருந்தாலும் இன்னும் படத்தில் அவர் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபத்தில் பிரபாஸ் மேலும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். அது பூஜா ஹெக்டேவுடன் 'ராதே ஷியாம்' என்ற காதல் கதை மற்றும் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக பெயரிடப்படாத திரைப்படம் ஆகும். மேலும் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்திற்கு ராதா கிருஷ்ணா குமார் தலைமை ஏற்பார் என்று அவர் கூறியுள்ளார்.
  Published by:Vijay R
  First published: