ANUSHKA SHARMA AND VIRAT KOHLI SHARED THEIR BABY PHOTO ON INSTAGRAM GHTA TMN
குழந்தையின் பெயர், புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட விராட் - அனுஷ்கா
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா
விராட் கோலி -அனுஷ்கா ஷர்மா தம்பதி இன்று தங்களின் குழந்தையின் பெயரை வெளியிட்டு, அதோடு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் 11ம் தேதி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மேலும், தம்பதியினர் தங்களது மகளின் புகைப்படத்தை எப்போது வெளியிடுவார்கள் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில், தனது மகளின் பெயரை அறிவித்த கையோடு குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அனுஷ்கா சர்மா கர்ப்பமானார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று வழிநடத்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டி, டி20 தொடர் முடிந்த பிறகு, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடினார். அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிரசவ தேதி நெருங்கி வந்ததால் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார்.
இந்த நிலையில், இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் அதற்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்ட தம்பதியினர் அதன்பின் எந்த அப்டேட்டுகளையும் கொடுக்கவில்லை. சமீபத்தில் தான் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை தம்பதியினர் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை பகிர்ந்ததோடு குழந்தையின் பெயர் 'வாமிகா' எனவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது, “காதல், நன்றி ஆகியவற்றுடன் நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், இந்த குட்டி வாமிகா மொத்தமாக வேறு ஒரு தளத்திற்கு எங்களை கொண்டு சென்றுவிட்டாள்.
கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம், சில நிமிடங்களில், சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள்..தூக்கம் குறைவாக உள்ளது. ஆனால், எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் அனைவரின் வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நல்ல ஆற்றல் ஆகியவற்றிற்கு நன்றி,” என தெரிவித்துள்ளார். அனுஷ்காவின் அந்த பதிவிற்கு, “எனது மொத்த உலகமும் ஒரே பிரேமில் உள்ளது” என விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார்.