• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Anushka Sharma : அனுஷ்கா ஷர்மா, சாக்ஷி தோனி ஒரே பள்ளியில் படித்தவர்களா? புகைப்படம் வைரல்!

Anushka Sharma : அனுஷ்கா ஷர்மா, சாக்ஷி தோனி ஒரே பள்ளியில் படித்தவர்களா? புகைப்படம் வைரல்!

அனுஷ்கா ஷர்மா,சாக்ஷி தோனி

அனுஷ்கா ஷர்மா,சாக்ஷி தோனி

அனுஷ்கா ஷர்மா மற்றும் எம்.எஸ்.தோனியின் மனைவியான சாக்ஷி ஆகிய இருவரும் கிளாஸ்மெட்ஸ் என்ற புதிய தகவல் தோனி மற்றும் கோலி ரசிகர்களிடையே ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் மனைவியான சாக்ஷி ஆகிய இருவரும் ஒரு காலத்தில் தங்களது பள்ளி பருவத்தில் ஒரே வகுப்பில் படித்த கிளாஸ்மெட்ஸ் என்ற புதிய தகவல் தோனி மற்றும் கோலி ரசிகர்களிடையே ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிளாஸ்மெட்ஸ் என்பதையும் தாண்டி உண்மையில் அனுஷ்கா ஷர்மா, சாக்ஷி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.

மேலும், இவர்கள் பள்ளியில் படித்த போது எடுத்து கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஷ்கா ஷர்மாவின் தந்தை ஓய்வு பெற்ற கர்னல் அஜய் குமார் ஷர்மா கடந்த 199ம் ஆண்டு அசாஸாமிற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட போது, தன் குடும்பத்தையும் தன்னுடன் அசாமிற்கு அழைத்து சென்றார். அங்குள்ள செயின்ட் மேரி பள்ளியில் அனுஷ்கா ஷர்மா சேர்க்கப்பட்டார். அப்போது அந்த பள்ளியில் சாக்ஷி ஏற்கனவே அங்கு படித்து கொண்டிருந்துள்ளார்.

சாக்ஷியின் வகுப்பில் சேர்க்கப்பட்ட அனுஷ்கா ஷர்மா அவருடன் நெருங்கி பழகி நல்ல நண்பர்கள் ஆகியுள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து ஒன்றாக பள்ளிக்கு சென்றுள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சாக்ஷி, “ஆமாம், நானும், அவரும் (அனுஷ்கா ஷர்மா) ஒரே பள்ளியில் தான் படித்தோம். முதல் முறை நாங்கள் இருவரும் பேசி கொண்ட போது எந்த ஊரிலிருந்து நீ வருகிறாய் என்று என்னை கேட்டார். அசாமில் உள்ள சிறு நகரத்தில் இருந்து வருகிறேன் என்றேன்.

ALSO READ | மதம் மாறிட்டிங்களா?-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி!

அதற்கு அவரும் நானும் நீ வசிக்கும் பகுதியில் இருந்து தான் வருகிறேன்’ என்று கூறினார். இதன் பிறகு நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழக துவங்கினோம் என்று குறிப்பிட்டிருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த சாக்ஷி ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையையும், அனுஷ்கா நடிப்பு துறையையும் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் இருவரும் தற்போது வரை நல்ல நண்பர்களாக உள்ளனர். இதனிடையே இருவரும் பள்ளி படிக்கும் பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இணையத்தில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



இதனிடையே நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி தவிக்கும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் சாமானிய மக்களுக்கு உதவும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து துவக்கிய நிதி திரட்டல் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. துவக்கத்தில் ரூ.7 கோடியையே இலக்காக நிர்ணயித்திருந்த கோலிக்கு வெகு விரைவிலேயே அந்த நிதி சேர்ந்ததால் இலக்கை ரூ.11 கோடியாக அதிகரித்தார். சமீபத்தில் அந்த இலக்கையும் தாண்டி ரூ.11.3 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. விராட் கோலியின் இந்த நிதி திரட்டும் முயற்சிக்கு இதன் மூலம் பல்வேறு தரப்பில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: