மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழைக் காட்டட்டும்! இயக்குநர் அனுராக் காஷ்யப் காட்டம்

மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழைக் காட்டட்டும்! இயக்குநர் அனுராக் காஷ்யப் காட்டம்
அனுராக் காஷ்யப்
  • News18
  • Last Updated: January 12, 2020, 4:41 PM IST
  • Share this:
மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழ், அவருடைய தந்தையின் பிறப்புச் சான்றிதழை வெளியிட வேண்டும் என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் இரு தினங்களுக்கு முன்னர் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது குறித்த அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. தொடக்கம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவருடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தநிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழை வெளியிட வேண்டும். பின்னர், அவருடைய பிறப்புச் சான்றிதழ், அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழை வெளியிவேண்டும். பின்னர், குடிமக்களின் ஆவணங்களைக் கேட்கவேண்டும்.


இந்த அரசுக்கு பேசத் தெரிந்தால் அவர்கள் பேச்சுவார்த்தையில் இறங்குவார்கள். இந்த அரசால் ஒரு கேள்வியைக் கூட எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு ஒரு திட்டமும் இல்லை. அவர்களால் ஒரு திட்டத்தைக் கொண்டுவர முடியாது. இது குப்பை அரசாங்கம். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பண மதிப்பு நீக்கம் போன்றது. அவர்களுக்கு ஒரு பார்வையும் கிடையாது’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Also see:

 
First published: January 12, 2020, 4:41 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading