ரோஜா சீரியல் செய்த மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

ரோஜா சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் 900 எபிசோடுகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

  • Share this:
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு பஞ்சமில்லாமல் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியல்களுக்கு இடையே டி.ஆர்.பியில் முதலிடம் பிடிப்பதற்கும் கடும் போட்டி நிலவும். குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் டி.ஆர்.பி பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே முதல் இடத்தில் இருந்து வந்தது. அந்தளவுக்கு விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டிருக்கும் ரோஜா சீரியல் திடீரென டி.ஆர்.பியில் பின்தங்கியது.

அந்த இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா பிடித்தது. இதற்கு காரணமாக ரோஜா சீரியல் கதைக்களம் ஸ்லோவாக இருந்ததாக கூறப்பட்டது. டி.ஆர்.பியில் முதல் இடம் அல்லது இரண்டாம் இடத்தில் இருந்தாலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து பெற்றுவரும் ரோஜா சீரியல் தற்போது மற்றொரு சாதனையை படைத்துள்ளது. அதாவது, 900 எபிசோடுகளைக் கடந்து, சின்னத்திரையில் அதிக எபிசோடுகளை கடந்த தொடர்கள் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்த தொடரில் கதாநாயகனாக சிபு சூரியனும், கதாநாயகியாக பிரியங்கா நல்காரியும் நடிக்கின்றனர். ஷாமிலி குமார் விலகியதையடுத்து புதிய வில்லியாக வி.ஜே அக்ஷையா நடித்து வருகிறார். ஆயிரம் எபிசோடுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியலுக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.ரோஜா சீரியலைப்போலவே தற்போது அதிக எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு தொடர் ‘யாரடி நீ மோகினி’. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஏறத்தாழ 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடர் மக்களின் ஏகோபித்தை வரவேற்பை பெற்று 1200 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக்கதையில் முதன்மை கதாப்பாத்திரமாக வரும் முத்தரசன் கதாப்பாத்திரத்தில் முதன்முதலாக சஞ்சீவ் நடித்து வந்தார். அவர் விலகியதையடுத்து ஸ்ரீகுமார் நடித்து வருகிறார்.

Also Read : ’நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்’.. பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய சீரியல் நடிகை ரேகா ஏஞ்சலினா..அவருடன் இணைந்து பாத்திமா பாபு, சைத்திரா, நக்சத்திரா, சுர்ஜித், தீபா, அரவிந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். காதல், குடும்பம் என மற்ற தொடர்களில் இருப்பதுபோன்ற கதையம்சமாக இருந்தாலும், இதில் கூடுதலாக ஆவி என்ற அமானுஷ்ய கதாப்பாத்திரத்தை நிறுவி ரசிகர்களை கவர்ந்துள்ளனர். கதைப்படி பணக்கார வீட்டுப் பையனான முத்தரசனுக்கு ஏற்கனவே சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவதால், முத்தரசனுக்கு அடுத்த கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. விறுவிறுப்பாக நகரும் சீரியல் 1200 எபிசோடுகளைக் கடந்துள்ளதை நாடக க்குழுவினர் அண்மையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: