• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த ரஜினி.. சூப்பர் ஸ்டார், மாஸ் மட்டுமல்ல ஒரு க்ளாஸ் நடிகரும் தான்.

அண்ணாத்த ரஜினி.. சூப்பர் ஸ்டார், மாஸ் மட்டுமல்ல ஒரு க்ளாஸ் நடிகரும் தான்.

Rajinikanth

Rajinikanth

தொடர்ந்து மாஸ் படங்களில் பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டு வந்த ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பின் கபாலி படத்தில் பழைய முள்ளும் மலரும் காளியாக வந்து மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கலங்க செய்திருப்பார்.

  • Share this:
40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்தின் Mass Plus Class பக்கங்களை அலசும் ஒரு சிறப்புத் தொகுப்பை காணலாம்.

 

தமிழ் சினிமா வரலாற்றில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக தனது மாஸாலும், ஸ்டைலாலும் ஆக்கிரமித்து ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை தன் காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்து சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் மாஸ் மற்றும் க்ளாஸ் திரைப்படங்கள் ஏராளம்.

பில்லா….. முரட்டுகாளை… தளபதி.. பாட்ஷா என மாஸ் திரைப்படங்கள் ஒருபக்கம் என்றால் முள்ளும் மலரும்... புவனா ஒரு கேள்வி குறி… ஆறிலிருந்து அறுபது வரை என க்ளாஸ் திரைப்படங்கள் இன்னொரு பக்கம் களை கட்டின. ஆரம்பத்தில் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ வில்லன் பரட்டையாக வந்த ரஜினிகாந்தை மாஸாக்கியது ‘பில்லா’ திரைப்படம்.

Also read:  பணத்துக்காக மகளை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த காதலனை கொலை செய்து பழிதீர்த்த தந்தை – நெட்டிசன்கள் பாராட்டு!

ஸ்டைலில் மட்டுமல்ல நடிப்பிலும் தான் மன்னன் என சொன்னார் ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில். இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த ஒரு உணர்ச்சி பிழம்பு வசனங்களோ கதறலோ எதுவும் இல்லாத உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அழகான காட்சிகளால் ரஜினிகாந்த் என்ற நடிகனை தமிழ் சினிமா அடையாளம் கண்டு கொண்ட தருணமாக ’முள்ளும் மலரும்’ அமைந்திருந்தது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளை’. வெள்ளிவிழாப் படமாக அமைந்து ‘அண்ணனுக்கு ஜே..காளையனுக்கு ஜே’ என தமிழ் சினிமா ரஜினிகாந்தை கொண்டாட வைத்தது.

Also read:    ரூ.76,000 மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக தந்த அலையன்ஸ் நிறுவனம்!

தீப்பொறி வசனங்களாலும்.. அனலடி சண்டைகளாலும் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் ‘புவனா ஒரு கேள்விக்குறி’…. ‘ ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற நடிப்பிற்கு சவால் விடும் திரைப்படங்களிலும் நடிக்க தவறியதில்லை. இப்படி மாஸாலும் க்ளாஸாலும் சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு தலைவனாக அவரது ரசிகர்களுக்கு மாற்றியது ’தளபதி’ திரைப்படம். பிறப்பால் புறக்கணிக்கப்பட்ட, பிறப்பின் அடையாளம் காரணமாகவே குற்றவாளியாக வாழ நேர்ந்த ஒருவனின் துயரத்தையும், ஆற்றாமையையும் இப்படத்தில் அழகாகப் பிரதிபலித்திருப்பார் ரஜினிகாந்த்.

எளிய மனிதன் அண்ணாமலையான ரஜினிகாந்தை நண்பண் சரத்பாபு ஏமாற்றி சொத்துகளை இழந்த பின், வாழ்வில் முன்னேறி நண்பனுக்குப் பாடம் கற்பிக்கும் ‘அண்ணாமலை’ கதையும்… . ‘ நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி’ என ரஜினி விரலை நீட்டி பஞ்ச் பேசும் ’பாட்ஷா’ வும் ரஜினிகாந்தின் திரை வாழ்வில் மாஸான மாஸாகியது.

Also read:  வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் இனி 3 மாதங்களில் செட்டில் – வருடக்கணக்கில் காத்திருப்புக்கு முடிவு!

தொடர்ந்து மாஸ் படங்களில் பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டு வந்த ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பின் கபாலி படத்தில் பழைய முள்ளும் மலரும் காளியாக வந்து மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கலங்க செய்திருப்பார்.

இன்று ரஜினி என்றால் அதிரடி மாஸ் நடிகர் என்ற இமேஜ் அவர்மீது விழுந்துவிட்டது. ஆனால் அதே அளவு ரஜினி ஒரு க்ளாஸ் நடிகர் என்பதையும் எவராலும் மறுக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: