• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Annaatthe, Valimai: அண்ணாத்த VS வலிமை - வெல்லப் போவது யாரு?

Annaatthe, Valimai: அண்ணாத்த VS வலிமை - வெல்லப் போவது யாரு?

ரஜினிகாந்த்-அஜித்

ரஜினிகாந்த்-அஜித்

அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாவதை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. அஜித்தின் வலிமையும் தீபாவளிக்கு வெளியாக அதிக சாத்தியமுள்ளது. அப்படி வெளியானால், வசூலில் யார் படம் முதலிடம் பிடிக்கும்?

  • Share this:
    முன்பு பண்டிகை நாள்களில் நான்குக்கு மேற்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் சாதாரணமாக வெளியாகும். வெளியான அத்தனை நடிகர்களின் படங்களும் வெற்றி பெற்ற சரித்திரமும் உண்டு. ஆனால், ஒரு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடும் நடைமுறை அமலான பிறகு, இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் பிரச்சனையே. இரு படங்களின் வசூலும் பாதிக்கப்படும். அனேகமாக இரண்டில் ஒன்று தோல்வியடையும்.

    2019  பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசமும் வெளியானது. வசூல் குறையும், ஏதாவது ஒரு படம் தோல்வியடையும் என்று பலரும் எச்சரித்தனர். மாறாக இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. பேட்ட வெளியான முதல் நாளில் சென்னையில் 1.03 கோடியை வசூலித்தது. விஸ்வாசம் முதல் நாளில் 97.93 லட்சங்களை வசூலித்தது. ஏறக்குறைய ஒரே வசூல். சென்னையில் பேட்டயின் மொத்த வசூல் சுமார் 14.93 கோடிகள். விஸ்வாசம் 12.18 கோடிகள்

    சென்டர்களில் பேட்ட முந்தினாலும், குடும்பம், மனைவி, குழந்தை என்ற சென்டிமெண்ட் காட்சிகளால் விஸ்வாசம் பி, சி சென்டர்களில் பட்டையை கிளப்பியது. பல இடங்களில் பேட்டயின் வசூலை முந்தியது. எனினும் உலக அளவில் பேட்ட முதலிடத்தையும், விஸ்வாசம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. தீபாவளிக்கு அண்ணாத்த, வலிமை படங்கள் வெளியானால் வலிமை அண்ணாத்த வசூலை முந்துமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    Photos : ’விக்ரம்’படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

    2014 இல் விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் ஒரே நாளில் வெளியானது. இந்தப் போட்டியில் ஜில்லாவை வீரம் முந்தியது. அதே போல் கமலின் தூங்காவனமும், அஜித்தின் வேதாளமும் ஒரே நாளில் வெளியான போது வேதாளம் தூங்காவனத்தைவிட அதிகம் வசூலித்தது. விஜய், கமல் படங்களை முறியடித்த அஜித் படங்கள் இதுவரை ரஜினி படத்தின் வசூலை தாண்டியதில்லை. வீரம், விஸ்வாசம் குடும்ப உறவுகளை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதால்தான் ஜில்லாவை முந்தியது, பேட்டக்கு கடும் போட்டியை அளித்தது. ஆனால், இந்தமுறை வலிமை ஆக்ஷன் பின்னணியிலும், அண்ணாத்த குடும்பப் பின்னணியிலும் தயாராகியிருக்கிறது

    Photos : கருப்பு-மஞ்சள் காம்போவில் ஆத்மிகாவின் நியூ போட்டோ ஷூட்..

    இரண்டு படங்களும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. ஆனால், யார் முந்தப் போகிறார்கள்? திரையுலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: