ரஜினி எடுத்திருக்கும் முடிவு - தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு?
ரஜினியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மீதி படபிடிப்பை பிப்ரவரி மாதத்தில் சென்னையிலேயே நடத்த திட்டமிடப்பட்டது.

ரஜினிகாந்த்
- News18 Tamil
- Last Updated: January 11, 2021, 2:32 PM IST
நடிகர் ரஜினிகாந்தின் திடீர் முடிவால் ‘அண்ணாத்த’ படத்தின் படபிடிப்பு தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவா, நடிகர் ரஜினியை வைத்து இயக்கி வரும் படம் ’அண்ணாத்த’. கடந்த ஆண்டு தொடங்கிய இதன் படபிடிப்பு மார்ச் மாதத்தில், 60 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்தது. இதையடுத்து கொரோனா பெருந்தொற்று ஏற்றபட்ட காரணத்தால், படபிடிப்பு கடந்த 9 மாதங்களாக நடத்தப்படாமல் இருந்தது. பின்னர் படபிடிப்புக்கு அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 14-ம் தேதி ’அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதற்கிடையே ரஜினியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் படக்குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர். ரஜினியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மீதி படபிடிப்பை பிப்ரவரி மாதத்தில் சென்னையிலேயே நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, படபிடிப்பில் கலந்துக் கொள்ள ரஜினி முடிவு செய்துள்ளாராம். அதற்குள் கொரோனா தடுப்பூசியும் புழக்கத்திற்கு வந்துவிடும் என்பதால், ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு படபிடிப்பு தள்ளிப் போகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவா, நடிகர் ரஜினியை வைத்து இயக்கி வரும் படம் ’அண்ணாத்த’. கடந்த ஆண்டு தொடங்கிய இதன் படபிடிப்பு மார்ச் மாதத்தில், 60 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்தது. இதையடுத்து கொரோனா பெருந்தொற்று ஏற்றபட்ட காரணத்தால், படபிடிப்பு கடந்த 9 மாதங்களாக நடத்தப்படாமல் இருந்தது. பின்னர் படபிடிப்புக்கு அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 14-ம் தேதி ’அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதற்கிடையே ரஜினியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் படக்குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்