• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘அண்ணாத்த பேசுனா ஸ்டைலு’.. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..

‘அண்ணாத்த பேசுனா ஸ்டைலு’.. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிவுள்ளது.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிருந்திருந்த நிலையில், தற்போது ‘அண்ணாத்த அண்ணாத்த ’ என்ற பாடல் வெளியாகிவுள்ளது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ். பி.பாலச்சுப்பிரமணியம் பாடியுள்ளார்.


    ரஜினி படங்களில் அவரது அறிமுகப் பாடலை பெரும்பாலும் பாலசுப்பிரமணியமே பாடுவார்.பாட்ஷாவில் வரும் நான் ஆட்டோக்காரன், முத்துவின் ஒருவன் ஒருவன் முதலாளி, அருணாச்சலத்தில் வரும் அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா. ஆகிய பாடல்கள் ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய பாடலாகும்.எஸ்.பி.பி பாடினாலே ஹிட் தான் என்ற பெயர் உள்ளது. அந்த வகையில் அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி நடிப்பில் வெளியாகும் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: