Home /News /entertainment /

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் பிரபல ஹீரோயின்

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் பிரபல ஹீரோயின்

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தென்காசி மற்றும் குற்றாலம் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பண்ணையாரும் பத்திமினியும் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அருண்குமார் குழுவுடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதியின் அடுத்தப் படம் பற்றிய  தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர் ராஜா, இர்பான் மாலிக் இணைந்து பியார் பிரேமா காதல் வெற்றிப் படத்தைத் தயாரித்தனர். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படத்தையும் தயாரித்துக் வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தென்காசி மற்றும் குற்றாலம் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெறும் இந்த படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் அதனைச் சுற்றி உள்ள இடங்களில் பிரமாண்டமான முறையில் நடக்க உள்ளது.

    படக் குழுவினருடன் விஜய் சேதுபதியும் அஞ்சலியும்


    இந்த படத்திற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் முக்கியமான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் கதாநாயகியான அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Actor vijay sethupathi, Vijay sethupathi, Vijay sethupathi next movie

    அடுத்த செய்தி