ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷங்கரின் பான் - இந்தியா படத்தில் அஞ்சலி...!

ஷங்கரின் பான் - இந்தியா படத்தில் அஞ்சலி...!

அஞ்சலி

அஞ்சலி

அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்திலும், தமிழில் பாவக் கதைகள் ஆந்தாலஜியிலும் நடித்திருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஷங்கர் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் புதிய படத்தை இயக்குகிறார். இந்த பான் - இந்தியா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்படத்தை கைவிட்டு தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்க தீர்மானித்தார். இந்தியன் 2 முடிந்த பிறகே ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும், அதுவரை பிற படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என லைகா தரப்பு நீதிமன்றம் சென்றது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட, ராம் சரண் படத்தின் வேலைகளை ஷங்கர் துரிதப்படுத்தினார். இசையமைப்பாளராக எஸ் தமன் நியமிக்கப்பட்டார். நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தமானார். தற்போது நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன

அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்திலும், தமிழில் பாவக் கதைகள் ஆந்தாலஜியிலும் நடித்திருந்தார். அவரது நடிப்பில் தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒரு படம் தயாராகி வருகிறது. ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்திலும் அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார்.

Also read... பூவே உனக்காக சீரியலில் இணைய உள்ள பிரபல சினிமா நடிகை - ரசிகர்கள் ஆவல்!

தமிழ், மலையாளம் இருமொழிகளில் இப்படம் தயாராகிறது. அத்துடன் ஷங்கர் படத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் சற்று பின்னடைவில் இருந்த அஞ்சலியின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

First published:

Tags: Actress Anjali