'நிம்மதியாக வாழ விடுங்கள்'... ரம்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அனிதா

'நிம்மதியாக வாழ விடுங்கள்'... ரம்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அனிதா

அனிதா - ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் மீதான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.

  • Share this:
கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் 4-வது சீசன் 2021-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி முடிவடைந்தது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அர்ஜூனன் டைட்டிலை வென்றார். பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடமும், ரியோ மூன்றாம் இடமும் பெற்றனர்.

இந்த சீசனில் நடிகர் ஆரியின் வெளிப்படையான செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேவேளையில் அவரை பிக்பாஸ் வீட்டில் விமர்சித்தவர்களையும் பார்வையாளர்கள் விட்டு வைக்கவில்லை. அதில் நடிகை ரம்யா பாண்டியன் ஆரியைப் பற்றி பேசியதற்காக அவரை சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வெளியில் வந்த பின்னர் தன் மீதான விமர்சனங்களைக் கண்டு கொண்ட அனிதா சம்பத் மீண்டும் நிகழ்ச்சிக்குச் சென்ற போது பார்வையாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த ரம்யா, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. எனவே போட்டியாளர்களை குறிப்பாக பெண்களை தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். நமது கடமை அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும். எனவே இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

ரம்யாவின் இந்த பதிவைக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதியிருக்கும் அனிதா சம்பத், “பிக்பாஸ் ஒரு விளையாட்டு. அது முடிந்துவிட்டது. போட்டியாளர்களுடன் இருக்கும் போது மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அப்போது வெளிப்படும் குணங்கள் எப்போதுமே இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். குறிப்பாக பெண் போட்டியாளர்களையும், அவர்களது குடும்பத்தைப் பற்றியும் எதிர்மறையான கமெண்ட் பதிவிடுவதை நிறுத்துங்கள். விமர்சிப்பதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?ஒரு மெசேஜ் போட்டு விட்டு நீங்கள் உங்கள் வேலையௌப் பார்க்க போய் விடுவீர்கள். ஆனால் அதை படிப்பவர்களது மனதை விட்டு போகாது. நீண்ட காலத்துக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

எல்லோரும் அவர்களுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். தங்களை மாற்றிக் கொள்வார்கள். அனைத்து போட்டியாளர்களையும் ரசிக்க பிக்பாஸ் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’ அல்ல. பிக்பாஸை ஒரு விளையாட்டாக மட்டும் பாருங்கள். பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” இவ்வாறு அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: