Bigg boss 4 Tamil | எம்.ஆர்.ராதாவாக மாறி பிக்பாஸை விளாசித்தள்ளிய அனிதா சம்பத்..

Bigg boss 4 Tamil | எம்.ஆர்.ராதாவாக மாறி பிக்பாஸை விளாசித்தள்ளிய அனிதா சம்பத்..

அனிதா சம்பத்

இரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதாவாக மாறிய அனிதா சம்பத் பிக்பாஸை விளாசித்தள்ளினார்.

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4-வது சீசன் தற்போது 45 நாட்களை எட்டியிருக்கிறது. தற்போது வரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் 15 பேர் மீதமிருக்கின்றனர்.

இந்த வாரம் ஆரி, அனிதா, பாலா, ரியோ, சம்யுக்தா, சுசித்ரா, சோம் சேகர் ஆகிய 7 பேரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். 7 பேரில் 9 வாக்குகள் பாடகி சுசித்ராவுக்கு கிடைத்திருக்கிறது. அவரை அடுத்து அனிதா சம்பத் 8 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அனிதா ஏற்கெனவே தன்னை கமல்ஹாசன் பேசவிடவில்லை என்றும், ஒருபக்கமாக பேசுகிறார் என்றும் குறை கூறி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதிருக்கும் நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பழைய நடிகர்கள் போல் நடித்துக்காட்ட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் நடிகர் ரமேஷ் நம்பியாராக மாறி எம்.ஜி.ஆர் கேரக்டரில் இருந்த ரியோவிடம் கத்திச் சண்டை போட்டார். அறந்தாங்கி நிஷா பராசக்தி வசனம் பேச, அனிதா சம்பத் ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதாவாகவும் அவரது தாயாராக ஆரியும் என்ட்ரி கொடுத்தனர். அப்போது பிக்பாஸ் வீடு குறித்து எம்.ஆர்.ராதா ஸ்டைலில் பேசிய அனிதா, 15 பேருக்கு ஒரு கழிவறை, சுகாதாரமில்லாத வீடாக இருக்கிறது. மிட் நைட்டில் காதல் செய்யக் கூட முடியவில்லை. இந்த வீட்டில் பிரைவசியே இல்லை என்றார்.

மேலும் இரவு 9.30 மணிக்கு எல்லோரும் டின்னர் சாப்பிடும் நேரத்தில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் என்றும் அப்போது தான் நாம் பல் துலக்கிக் கொண்டு இருப்போம் எனவும் நகைச்சுவை பொங்க கூறிய அவர், இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்டைச் சுற்றி 16 கேமராக்கள் வைப்பதற்கு பதிலாக கிராமத்தில் அந்தக் கேமராக்களை வைத்தால் குற்றச் சம்பவங்களாவது குறையும் என்றார்.

பார்க்க : நயன்தாரா அழகிய புகைப்படங்கள்!

இவை அனைத்தையும் எம்.ஆர்.ராதாவின் தாய் கேரக்டரில் அருகில் இருந்து கேட்ட நடிகர் ஆரி, அனிதா சொல்லியதை குறித்து வைத்துக் கொள்ளுமாறு பிக்பாஸிடம் கூறினார். பிக்பாஸை விளாசித் தள்ளினாலும் எம்.ஆர்.ராதா கேரக்டரில் அனிதா செய்த டாஸ்க் பிக்பாஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: