தந்தையின் மரணத்திற்கு ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அனிதா சம்பத் ஹேஸ்டேக்

தந்தையின் மரணத்திற்கு ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அனிதா சம்பத் ஹேஸ்டேக்

அனிதா சம்பத்

பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தையின் மரணத்தை தொடர்ந்து ட்விட்டரில் அனிதா சம்பத் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

 • Share this:
  பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. பின்பு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா வீட்டினுள் சென்றார். இரண்டு வாரங்களிலே சுசித்ரா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ், சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா என அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

  செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய அனிதா சம்பத். பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா 10-வது போட்டியாளராக கடந்த வார இறுதியில் வெளியேறினார். மேலும் தனது புத்தாண்டை வீட்டில் கொண்டாட வேண்டும் எனவும் கமல் சாரிடம் கூறினார்.

  ஆனால் இன்று அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் இறந்துவிட்டதாக வந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தரிசனத்திற்காக ஷீரடி சென்ற அனிதாவின் தந்தை ரயிலில் திடீரென இறந்துள்ளார்.
  தந்தையின் மரணம் பற்றி அனிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் சில உருக்கமான பதிவு செய்துள்ளார். அதில் ‘என்னால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு வரனும். உன்கிட்ட நிறைய பேசணும். உன் வாய்ஸ் கேட்டு 100 நாள் மேல ஆச்சு’ என்று கூறியுள்ளார். மேலும் தனது தந்தைக்கு அல்சர் இருந்ததால் அவரால் இரண்டு நாட்கள் சாப்பிட முடியவில்லை.அ வருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்பதையும் கூறியுள்ளார்.

   

  இந்நிலையில் தந்தை மரணம் குறித்து அனிதா சம்பத்திற்கு ட்விட்டரில் ரசிகர்கள் ஆறுதல் கூறி #anithasampath என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: