பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை ரயிலில் மரணம் - குடும்பத்தினர் சோகம்

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை ரயிலில் மரணம் - குடும்பத்தினர் சோகம்

அனிதா சம்பத் | ஆர்.சி.சம்பத்

Bigg Boss Anitha Sampath Father Passed Away | பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அனிதா சம்பத்தின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.

  • Share this:
தமிழ் ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அனிதா சம்பத். தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தனித்துவமாக விளையாடினார். மேலும் பிக்பாஸில் தான் வளர்ந்த விதம், எதிர்கொண்ட பொருளாதார பிரச்னைகளைக் கூறிய அனிதா நடுத்தர வர்க்க குடும்பத்தின் முகமாக இருந்தார் என்றும் சொல்லலாம்.

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா, 10-வது போட்டியாளராக பார்வையாளர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று கடந்த வார இறுதியில் வெளியேறினார். அப்போது புத்தாண்டை எனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்த அவரது வீட்டில் தற்போது எதிர்பாராத மரணம் நிகழ்ந்துள்ளது.

அனிதா சம்பத்தின் தந்தையும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. இந்த திடீர் மரணம் அனிதா சம்பத்தின் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனிதா சம்பத் இன்னும் தனது தந்தையை நேரில் பார்க்கவில்லை. நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் தனது தந்தையைப் பற்றி பேசிய அனிதா, “என் அப்பாவை நான் தொட்டுக் கூட பார்த்ததில்லை. அதனால் ஒரு ஆணின் பாசத்தை என் கணவரிடம் மட்டும் தான் உணர்ந்தேன்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: