முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும்... இனி என் அப்பா வரமாட்டாரு - அனிதா சம்பத் உருக்கம்

விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும்... இனி என் அப்பா வரமாட்டாரு - அனிதா சம்பத் உருக்கம்

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

தந்தையின் மரணம் பற்றி உருக்கமாக கருத்து பதிவிட்டிருக்கிறார் அனிதா சம்பத்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அனிதா சம்பத். தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தனித்துவமாக விளையாடினார். மேலும் பிக்பாஸில் தான் வளர்ந்த விதம், எதிர்கொண்ட பொருளாதார பிரச்னைகளைக் கூறிய அனிதா நடுத்தர வர்க்க குடும்பத்தின் முகமாக இருந்தார் என்றும் சொல்லலாம்.

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா, 10-வது போட்டியாளராக பார்வையாளர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று கடந்த வார இறுதியில் வெளியேறினார். அப்போது புத்தாண்டை எனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்த அவரது வீட்டில் தற்போது எதிர்பாராத மரணம் நிகழ்ந்துள்ளது.

அனிதா சம்பத்தின் தந்தையும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 62. தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மரணமடைந்தார். அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. இந்த திடீர் மரணம் அனிதா சம்பத்தின் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அனிதா சம்பத், எனது தந்தை ஆர்.சி.சம்பத் வயது முதிர்வு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு அல்சர் பாதிப்பு இருந்தது. அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை தனிமைப்படுத்திக் கொள்ள சென்ற போது அவரை சந்தித்தேன். பிக்பாஸ் முடிந்து வீட்டிக்கு வந்ததும் அவர் சீரடி சென்று விட்டார். நான் அவருடன் பேசக்கூட இல்லை. ஏனெனில் அவரது தொலைபேசியில் சிக்னல் இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்று காலை 8 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். அவர் சீரடியில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். நாளை சென்னை வந்திருப்பார். நான் அவர் உயிருடன் இருப்பதாக எண்ணுகிறேன். என்னால் நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு நடந்து வரணும். உன்கிட்ட நெறைய பேசணும். உன்னுடைய குரல் கேட்டு நூறு நாள் ஆச்சு.

தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு முன்னாடியே அப்பா கூட கொஞ்ச நாள் இருந்திருப்பேன். விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும். என் அப்பா இனி திரும்ப வரமாட்டாரு. இந்த வாரம் நான் நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டிருந்தால் கடைசியாகக் கூட அப்பாவ பாத்திருக்க முடியாது. வாழ்க்கை கணிக்க முடியாதது.

எல்லாம் ஒரு காரணத்துடன் தான் நடக்கிறது. பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவரை மிஸ் செய்கிறேன். குற்றவுணர்ச்சியாக இருக்கிறது” இவ்வாறு அனிதா சம்பத் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Anitha sampath