அறந்தாங்கி நிஷாவால் பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத்... என்ன நடக்கிறது?

அறந்தாங்கி நிஷாவால் பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத்... என்ன நடக்கிறது?

அனிதா சம்பத்

அனிதா, நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல இருக்கிறார் என நிகிழ்ச்சியுடன் கண் கலங்கி கூறுகிறார்.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. நேற்று முதல் நாள் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தனக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட் மற்றும் பிடிக்காதவர்களுக்கு ஹார்ட் ப்ரேக் கொடுக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் கூறினார். அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஷிவானிக்கு தான் ஹார்ட் ப்ரேக் கொடுத்தனர்.இதனால் மற்ற போட்டியாளர்கள் பலர் தன்னை டார்கெட் செய்வதை உணர்ந்த ஷிவானி வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், ஷிவானி தன் கையில் மொத்தம் 9 ஹார்ட் ப்ரேக் இருப்பதாக வருத்தமாக கூறுகிறார். அப்போது ஆரி டெய்லி 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போடுறீங்க இல்ல.. என்ன ஆகணும் என்பதற்காக அதை போடுறீங்க என ஷிவானியிம் கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கு அவர் என்ன பதில் கூறுவார் என்பதை தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அறந்தாங்கி நிஷாவிற்கு, அனிதா சம்பத்தை ஹார்ட் முத்திரை கொடுக்கிறார். அதற்கான காரணம் குறித்து பேசிய அனிதா, நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல இருக்கிறார் என நிகிழ்ச்சியுடன் கண் கலங்கி கூறுகிறார். மேலும் அம்மா மிகவும் டார்க்காக இருப்பார், நகை போட்டால் தனது நிறம் மிகவும் டார்க்காக தெரியும் என தன்னையே தாழ்த்தி கொள்வார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் பெற்றோர் சந்திப்பு போன்றவற்றிற்கு வர கூட மிகவும் யோசிப்பார்.கருப்பு நிறத்தை ஒரு தாழ்வாக எண்ணாமல் அதை ஒரு நகைச்சுவையாக மாற்றி மற்றவர்களிடத்தில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என நிஷாவை புகழ்ந்தார். மேலும் எங்க அம்மா, நிஷா அக்காவிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என விரும்புவதாக அனிதா சம்பத் கூறுகிறார். அவரை நிஷா கட்டியணைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கருப்பு நிறம் சாதனைக்கு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் நகைச்சுவை திறன் வாய்ந்த அறந்தாங்கி நிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சென்றிருப்பது பாராட்டக்கூடிய விஷயமே.
Published by:Sivaranjani E
First published: