ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எந்த விதமான தெய்வக் குத்தம்... அனிருத்துக்கு மட்டும் ஏன் இப்படி...?

எந்த விதமான தெய்வக் குத்தம்... அனிருத்துக்கு மட்டும் ஏன் இப்படி...?

அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசையின் மூலம் மாஸ் காட்சிகளுக்கு கூடுதலாக மாஸ் சேர்த்திருக்கிறார் அனிருத்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசையின் மூலம் மாஸ் காட்சிகளுக்கு கூடுதலாக மாஸ் சேர்த்திருக்கிறார் அனிருத்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  அனிருத் இசையில் விஜய்யின் குரலில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டிக் கதை பாடல் வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேரப் பெற்று வருகிறது.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒரு குட்டிக் கதை என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை விஜய் பாட அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வைகளையும், 10 லட்சம் லைக்குகளையும் பெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  இந்தச் சூழலில், இப்பாடல் அன்னை காளிகாம்பாள் திரைப்படத்தில் வடிவேலு குரலில் இடம்பெற்ற ’சந்தன மல்லிகையில்’ என்ற பாடலை ஒத்திருப்பதாகப் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

  இதேபோல, ஒரு குட்டிக் கதை பாடல் சரத்குமார் நடிப்பில் வெளியான ’அரசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’மல்லிகை மல்லிகை பந்தலே’ பாடலின் இசையை ஒத்திருப்பதாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

  அனிருத் இசையில் உருவாகும் பாடல்கள் வேறொரு பாடலை ஒத்திருப்பதாக ரசிகர்கள் கிண்டல் அடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே தர்பார் திரைப்படத்தில் வெளியான ’சும்மா கிழி’ பாடல், அது வெளியான சில மணி நேரங்களிலேயே ’வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் இடம்பிடித்த ’தண்ணி குடம் எடுத்து’ பாடலை ஒத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

  மேலும், ’தண்ணி குடம் எடுத்து’ பாடலை சில ஐயப்பன் பக்தர்கள் பக்திப் பாடலாக மாற்றிப் பாட, அந்தப் பாடலை அனிருத் காப்பி அடித்ததாக இணையத்தில் அனிருத்தை ஓட்டி எடுத்தனர் நெட்டிசன்கள்.

  இதற்கு முன்னர் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற ’எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துருச்சுடி’ பாடல் பிரபல ஹாலிவுட் ஆல்பமான chibz - feeling meல் இருந்து அப்படியே காப்பி செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து யூடியூப் தளத்திலிருந்து கல்யாண வயசுதான் பாடல் நீக்கப்பட்டது.

  இசையமைப்பாளர்கள் காப்பி சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல என்றாலும் அனிருத், படத்திற்குப் படம் பக்தி பாடலில் இருந்து பாடல்களைக் காப்பியடித்து மாட்டிக் கொள்வது எந்த விதமான தெய்வ குத்தம் என்றுதான் தெரியவில்லை.

  Also see:

  Published by:Rizwan
  First published:

  Tags: Anirudh