சமீபத்தில் வைரலான கவர்ச்சி வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது மார்பிங் செய்யப்பட்டது எனவும், நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
’என்னை அறிந்தால்’ மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் என்ற வலைத் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், கறுப்பு நிற உடையில் பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. அந்தப் பெண் பார்ப்பதற்கு அனிகா சுரேந்திரன் போலவே இருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவா இப்படி மாறிவிட்டார் என அதிர்ச்சியானார்கள் ரசிகர்கள்.
தற்போது அந்த வீடியோவுக்கு விளக்கமளித்திருக்கும் அனிகா, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், இப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன், அது மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனை அனைவரும் நீக்குமாறும் கூறியுள்ளார் அனிகா.
மேலும் தொடர்ந்த அவர், ”உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், இது என்னை கொஞ்சம் தொந்தரவு செய்கிறது. இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னது போல் இது நன்றாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ. அதைப் பார்க்கும்போது, நான் கூட அதிர்ச்சியடைந்தேன். ஆன்லைனில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.