• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காதலை ஏற்காவிட்டால் தற்கொலை - நடிகை அனிகா அதிர்ச்சி!

காதலை ஏற்காவிட்டால் தற்கொலை - நடிகை அனிகா அதிர்ச்சி!

அனிகா சுரேந்திரன்

அனிகா சுரேந்திரன்

அந்த மெயிலை பார்க்கவே தனக்கு பயமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
நடிகர் அஜித் குமார் மற்றும் நயன்தாரா ஆகியோருடன் நடித்ததன் மூலம் பெயர் பெற்ற அனிகா சுரேந்திரன் சமீபத்தில் 16 வயதை எட்டியுள்ளார். என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான இவர், நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக நடித்திருந்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடனும் ஒரு விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

தற்போது புதிய படங்களில் கமிட் ஆவது மற்றும் வித்தியாசமான போட்டோ ஷூட்களில் பங்கேற்பதில் மிகவும் பிஸியாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். இதுவரை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான புகைப்படம் / வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். ஃபோட்டோ ஷூட்கள் நடத்தி தனது படங்களை ஷேர் செய்வதன் மூலம் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகளைப் பெறுவது மட்டுமின்றி, அனிகா தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் உரையாடுவதற்கும் பெயர் பெற்றவர்.

வழக்கம் போல சமீபத்தில் அவர் நடத்திய லைவில், தன்னை பின்தொடர்பவர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் நாம் பதிலளிக்கிறேன் என கூறியிருந்தார். அப்போது அவர் ரசிகர் ஒருவர், ‘உங்களுடைய தீவிர ரசிகர் ஒருவர் உங்களை காதலிப்பதாகக் கூறி, நீங்கள் காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.

Also read... மருத்துவத்துக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்த சிரஞ்சீவி - நன்றி கூறிய நடிகர் பொன்னம்பலம்!

அதற்கு பதிலளித்த அனிகா, ‘உண்மையில் அப்படி ஒரு நிலைமை தனக்கு ஏற்கனவே ஏற்பட்டதாக கூறினார். காதலிப்பதாக சொல்லி தனக்கு ஒரு மெயில் வந்ததாகவும், அந்த மெயிலை பார்க்கவே தனக்கு பயமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் அதை அப்படியே விட்டுவிட்டதாக அனிகா கூறியுள்ளார்.மற்றொரு ரசிகர் ஒருவர் , எப்போதாவது உங்களின் உயரம் பற்றி கவலையடைந்து உண்டா? என கேட்டார். அதற்கு பதிலளித்த அனிகா, எனது உயரம் 5 அடி 2 அங்குலம், அதனால் சில நேரங்களில் என் உயரம் குறித்து தாழ்வாக நினைத்துளேன். ஆனால் 5 அடி 2 அங்குலம் என்பது சரியான உயரம். புகைப்படங்களில் பார்க்கும் போது இதை எனது பிளஸாக பார்க்கிறேன். ஆண்களின் உடை உள்ளிட்ட எந்த உடை அணியவும் இது சரியாக உள்ளது என்று கூறியுள்ளார்.எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் தயாரிக்கப்படவிருக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அனிகா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும இவரை “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாராவின் தோற்றத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தனது தனித்துவமான உடைகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்புகளுடன், அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய திரைப்படத் துறையின் சிறந்த கதாநாயகிகளுக்கு போட்டியாகவே இருந்து வருகிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: