முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் 'பிசாசு 2' படப்பிடிப்பு தொடங்கியது..

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் 'பிசாசு 2' படப்பிடிப்பு தொடங்கியது..

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

மிஷ்கின் இயக்கத்தில் 2014ல் வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குநர் பாலா தயாரித்த இப்படத்தில் நாகா, பிரயகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வழக்கமான பேய் படத்தைப் போல் அல்லாமல், அதனுள் காதல், சென்டிமென்ட் என உணர்வுப்பூர்வமான காட்சிகளால் பிசாசு படம் எடுக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா மற்றும் பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் "பிசாசு 2" படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக நடிகை ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியான நிலையில், இப்படத்தின் பணிகளுக்காக ஜன.15ம் தேதி பூஜை நடைபெற்றது.

ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2

பாடல் பதிவு உள்ளிட்ட முன் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரி 21ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’பிசாசு 2’படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளார். ராக்போர்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார் இப்படத்தில் சித்ஸ்ரீராம் ஒரு மெல்லிசை பாடலை பாடியுள்ளார் என்பதையும் குழு வெளிப்படுத்தியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் 2014ல் வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குநர் பாலா தயாரித்த இப்படத்தில் நாகா, பிரயகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வழக்கமான பேய் படத்தைப் போல் அல்லாமல், அதனுள் காதல், சென்டிமென்ட் என உணர்வுப்பூர்வமான காட்சிகளால் பிசாசு படம் எடுக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பிசாசு 2 படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. மேலும் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டதன் சுவாரசியப் பின்னணியையும் ஆண்ட்ரியா ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2

2015-ம் ஆண்டு ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பாட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை அப்படியே 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக படக்குழு உருவாக்கி இருந்தது. இது குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது, "மிஷ்கின் என்னிடம் 'பிசாசு 2' கதையைச் சொன்னபோது நான் உடனடியாக அந்தக் கதாபாத்திரத்தோடு எனது வம்சாவளியை ஒப்பிட்டுப் பார்த்தேன். பழைய புகைப்படங்களைத் தேடிப் பிடித்து அவருக்கு அனுப்பினேன்.

இந்தப் புகைப்படங்கள் அமானுஷ்யமாகவும் அழகாகவும் இருப்பதாகவும், படத்தில் எனது கதாபாத்திரத்தின் தோற்றத்தை இதை வைத்து உருவாக்கி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைக்க விரும்புவதாகவும் மிஷ்கின் என்னிடம் கூறினார். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்" என்று விளக்கம் கொடுத்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் வெளியாகியிருந்தது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம்.

First published:

Tags: Andrea Jeremiah, Director mysskin