மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சி! வீடியோவை வெளியிட்ட ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  பொங்கலை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தனது அசால்ட்டான நடிப்பினால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் 24 மணி நேரத்தில்
  25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

  மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் நிலையில்,படத்தின் வெற்றியை மாஸ்டர் படக்குழு கொண்டாடி வருகிறது.  இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ‘வில்வித்தை பார்ப்பதை விட மிகவும் கடினமானது’என்றுக் கூறி throwback, thistimelastyear, master உள்ளிட்ட ஹேஸ்டேக்களை பயன்படுத்தியுள்ளர்

   
  மாஸ்டர் படம் முதலில் 100 சதவீத இருக்கை அனுமதியுடன் வெளியாவதாக இருந்த நிலையில்,மத்திய அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை அனுமதிக் கூடாது என கூறியதால்,மீண்டும் 50 சதவீதமாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: