மாஸ்டர் படத்தில் பணியாற்றியது குறித்து நடிகை ஆன்ட்ரியா மனம் திறந்துள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடித்தது பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை ஆன்ட்ரியா, “விஜய் எவ்வளவு உச்சம் தொட்டிருந்தாலும் அவர் மிகச்சிறந்த மனிதர். மிகவும் எளிமையானவர். அவர் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதால் தான் நடித்தேன். இந்தப் படத்தில் நான் பாடல்கள் எதுவும் பாடவில்லை. பெண்கள் பாடும் பாடல்கள் எதுவும் படத்தில் எதுவும் இல்லை.
படத்தில் விஜய் உடன் எனக்கு ஒரு சேசிங் காட்சி இருக்கிறது. அக்காட்சி சிறப்பாக இருக்கும். அடுத்த தலைமுறை இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமானவர். மாஸ்டர் படத்தை அடுத்து அரண்மனைக் கிளி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறேன்’ என்றார்.
ஊரடங்கால் திட்டமிட்டபடி திரைக்கு வராத மாஸ்டர் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் ஆன்ட்ரியா புதிய தகவலை வெளியிட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andrea Jeremiah