நடிகை ஆன்ட்ரியாவின் ‘நோ என்ட்ரி’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

நடிகை ஆன்ட்ரியாவின் ‘நோ என்ட்ரி’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

நோ என்ட்ரி ஃபர்ஸ்ட் லுக்

ஆன்ட்ரியா நடித்துள்ள ‘நோ என்ட்ரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து ஆன் ட்ரியா நடித்தி முடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘நோ என்ட்ரி’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

  இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க சிரபுஞ்சியைச் சுற்றியுள்ள காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மனித நடமாட்டம் இல்லாத மலைப்பிரதேசத்தில் இளம் தம்பதிகள் தங்குகிறார்கள். அங்கு மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்ள தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

  இந்தப் படத்துக்காக பயிற்சி அளிக்கப்பட்ட 15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 45 நாட்கள் சிரபுஞ்சியில் தங்கி அங்கேயே முழு படத்தையும் படமாக்கி திரும்பியுள்ளது படக்குழு.  இந்தப் படத்தில் ஆன்ட்ரியாவுடன் ரண்யா, மும்பை சாக்‌ஷி, ஜெயஸ்ரீ, ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு, இசையமைப்பாளராக அஜிஸ், படத்தொகுப்பாளராக பிரதீப் ஈ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
  Published by:Sheik Hanifah
  First published: