முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘தளபதி 64’ படத்தில் இணைந்த ஆன்ட்ரியா?

‘தளபதி 64’ படத்தில் இணைந்த ஆன்ட்ரியா?

நடிகை ஆன்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா

  • Last Updated :

விஜய்யின் 64-வது படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தளபதி 64’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அனிருத் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் நடிகை ஆன்ட்ரியா பேராசிரியை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: வசூல் வேட்டை நடத்திய பிகில்...!

top videos

    First published:

    Tags: Andrea Jeremiah