முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆன்ட்ரியா பிறந்தநாள் : மிஷ்கினின் அசத்தல் கிஃப்ட்... மாஸ்டர் டீமின் ஸ்பெஷல் போட்டோ

ஆன்ட்ரியா பிறந்தநாள் : மிஷ்கினின் அசத்தல் கிஃப்ட்... மாஸ்டர் டீமின் ஸ்பெஷல் போட்டோ

ஆன்ட்ரியா

ஆன்ட்ரியா

ஆன்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தலான கிஃப்ட் வழங்கியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

  • Last Updated :

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிசாசு’. நாகா, ராதாரவி, ப்ரயாகா மார்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

இந்தப் படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதை தனது பிறந்தநாளன்று அறிவித்தார் மிஷ்கின். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஆன்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் - கார்த்திக் ராஜா கூட்டணி இணையும் முதல் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

டிசம்பர் 15-ம் தேதி‘பிசாசு 2’ பட வேலைகள் பூஜையுடன் தொடங்கிய நிலையில் படத்திற்காக பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாக ‘பிசாசு 2’ போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

அதேபோல் ‘மாஸ்டர்’ படக்குழுவும் ஆன்ட்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யுடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஆன்ட்ரியாவை வாழ்த்தி வருகிறார்கள்.

கடைசியாக ஆன்ட்ரியா நடிப்பில்‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி படம் வெளியானது. அதைத்தொடர்ந்து ‘மாஸ்டர்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர ‘நோ என்ட்ரி’ ‘வட்டம்’, ‘மாளிகை’, ‘கா’, ‘அரண்மனை 3’ , ‘பிசாசு 2’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஆன்ட்ரியா.

top videos

    உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

    First published:

    Tags: Andrea Jeremiah, Kollywood