முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

ரசல்

ரசல்

ஐபிஎல் தொடரில் மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பாலிவுட் சினிமாவில் பாடல் ஒன்றின் மூலம் அறிமுகமாகியுள்ளார் கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரு ரசல்.

இந்தியாவில் ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் நாளை மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் டெல்லி-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது கொல்கத்தா அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆண்ட்ரு ரசல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ளார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ‘இந்தி பாடல் ஒன்றின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளேன். அந்த பாடல் விரைவில் வெளியாகும்.’ என்று பதிவிட்டுள்ளார்.




 




View this post on Instagram




 

Recorded groovy hindi song for @palash_muchhal for my bollywood debut single! Releasing super soon!! Cant wait


A post shared by Andre Russell (@ar12russell) on



Also watch

First published:

Tags: IPL 2019