நடிகராக அவதாரமெடுத்த துணை முதலமைச்சர்!

படப்பிடிப்பில் துணை முதலமைச்சர்

 • News18
 • Last Updated :
 • Share this:
  விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படத்திற்காக துணை முதலமைச்சர் நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.

  ஆந்திர மாநிலத்தின் 5 துணை முதலமைச்சர்களில் ஒருவர் புஷ்பா ஸ்ரீவாணி. பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் இருக்கும் இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

  இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அம்ருத பூமி என்ற படத்தை ஆனந்த் என்பவர் இயக்குகிறார். பக்ருதி அதிதி தேவா பவா என்னும் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

  இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார்.  இவருடன் விழிய நகரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பழங்குடியினர் நலத்துறை பள்ளியிலும், அருகில் உள்ள வயல்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  பழம்பெரும் நடிகர் பிரசாத் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விழிய நகரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், ரசாயனம் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு” என்றார்

  துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணி கூறுகையில், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

  வீடியோ பார்க்க: நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியருக்கு கொடுமை!  Published by:Sheik Hanifah
  First published: